ஜூலை 16., பெட்ரோல் விலை உயர்வா? குறைவா?: இன்றைய நிலவரம்..!!

16 July 2021, 8:33 am
Quick Share

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 102.23 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 102.23 ரூபாய், டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Views: - 96

0

0