மார்ச் 29.,: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

Author: Aarthi Sivakumar
29 March 2021, 8:28 am
Government approves 20% ethanol blended petrol to reduce vehicular pollution
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 92.77 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.10 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இடையில் ஒரு நாள் கூட விலை குறைந்தபாடில்லை. அதிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்தது.

அந்த வகையில் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்திலும் அதன் விலை எகிறியது. இதனால் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு கொண்டே வந்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. இது தான் அதிகபட்ச பெட்ரோல், டீசல் விலையாக பேசப்பட்டது.

அதன்பின்னர், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. கடந்த மாதம் இறுதி வரை உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை, தமிழகத்தில் தேர்தல் நேரமாக இருப்பதால் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா 16 காசு குறைந்திருந்தது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு, அதன் விலை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் 4வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.77க்கும் டீசல் ரூ.86.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.

Views: - 64

0

0