அக்., மாத ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் : நாளை முதல் விநியோகம்!!

27 September 2020, 4:21 pm
ration Token- Updatenews360
Quick Share

அக்டோபர் மாதம் ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் நாளை முதல் மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் முறையை தமிழக அரசு அறிவித்து கடைபிடித்து வருகிறது. தொடர்ந்து பொதுமுடக்கத்தால் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இலவசமாக பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது, ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து டோக்கன் முறையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது.

தற்போது தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு செப்.,30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை ரேஷனில் வாங்குவதற்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

இதனால் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, அதாவது வரும் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே வந்து டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.