டெல்டா பிளஸ் தொற்றை பரிசோதிக்க பெங்களுரூவில் இருந்து கருவிகள் பெறப்படும் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2021, 1:45 pm
PTR - Updatenews360
Quick Share

மதுரை : டெல்டா ப்ளஸ் கொரோனாவை சாதாரண கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 200 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை வணிகவரித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் திறந்து வைத்தனர். அவர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் பங்கேற்றார்.

தொடர்ந்து அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர், திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்தபோது கொரோனா பரவல் மிகுந்து இருந்தது அதனை வகைப்படுத்தியும், ஆக்சிஜன் பற்றாக்குறையையும் சரி செய்து மீண்டும் மூன்றாம் நிலையில் அதன் பற்றாக்குறை நிரந்தரமாக ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மதுரையில் நான்கு இடங்களில் ஆக்சிஜனை உற்பத்தி இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு தற்போது இரண்டு செயல்பட்டு வந்துள்ளது மேலும் இரண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரையில் மே 26 ஆம் தேதி 1166 பேருக்கு கொரோனா தற்போது 70 பேர் என தொற்று என குறைந்துள்ளது. பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மதுரை மாநகர் பகுதிகளில் பறக்கும்படைகளை அதிகரித்து

டெல்டா ப்ளஸ் கொரோனாவை சாதாரண கொரோனா பரிசோதனை கருவிகள் மூலம் கண்டறிய முடியாது. இதற்காக பிரத்தியேகமாக பெங்களூருவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பினால் மட்டுமே வைரஸை கண்டறிய முடியும்.

தொடர்ந்து பெங்களூரில் உள்ள பிரத்தியேக ஆய்வுக் கருவியை தமிழகத்திற்கு கூடுதலாக பெற முதல்வர் தலைமையில் முயற்சிகள் எடுக்கப்படும். தனியார் மருத்துவமனையில் கட்டண வசூல் குறித்து கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை கண்டறிந்து தீர்வு காண முடியும், தனி நபர்கள் அளித்த புகாரின்படி விசாரித்து அவர்களுக்கு மீண்டும் பணத்தை பெற்றுக் கொடுத்தோம். இவ்வாறு கூறினர்.

Views: - 208

0

0