Categories: தமிழகம்

உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக தற்கொலைக்கு முயன்ற நடத்துனர் : போலீசாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்… அடுத்தடுத்து அதிர்ச்சி!

கன்னியாகுமரி : உயர் அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக மூன்று முறை அரசு போக்குவரத்து கழகத்தால் விருது பெற்ற நடத்துனர் தூக்க மாத்திரை அருந்தி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(46) வயதான இவர் அரசு பேருந்து நடத்துனராக பணி புரிந்து வருகிறார் உமா மகேஷ்வரி என்ற மனையும் 2-மகன்களும் உண்டு. இவர் குழித்துறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றும் நடத்துனர் பாலசுப்ரமணியன் களியக்காவிளை-சேலம் மற்றும் நாகர்கோவில்-திருச்செந்தூர் வழிதடத்தில் பணியாற்றி வந்த நிலையில் முதுகு தண்டுவட நோய் மற்றும் சிறுநீரக கல் பிரச்சனையில் அவதியுற்று வந்ததாக தெரிகிறது.

கழிந்த சில மாதங்களுக்கு முன் முதுகு தண்டுவட பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை விடுப்பு கேட்டு மருத்துவ சான்றிதழ் உடன் விண்ணப்பித்து விடுப்பில் இருந்துள்ளார். நேற்று மீண்டும் பணிக்கு செல்ல குழித்துறை பணிமனைக்கு சென்ற போது பணிமனை மேலாளர் சிவசக்தி ஐயப்பன் ஏற்கானவே பாலசுப்ரமணியன் கொடுத்த விடுப்பு மனுவை ஏற்காமல் 15-நாட்களுக்கும் விடுப்பு கொடுக்காமல் ஆப்சென்ட் போட்டிருப்பதும் மீண்டும் பணிக்கு சேர அனுமதிக்கவில்லை என்றும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் அறையில் தூங்க சென்ற பாலசுப்ரமணியன் காலை வெகு நேரமாகியும் வெளியே வராததை கண்டு சந்தேகமடைந்த மனைவி உமா மகேஷ்வரி அறைக்குள் சென்று பார்த்தபோது, அவர் வாயில் நுரை தள்ளியபடி மயக்கமான நிலையில் கிடக்கவே மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் அவர் தனது தற்கொலைக்கு பணிமனை மேலாளர் சிவசக்தி ஐயப்பன் மற்றும் மேலதிகாரிகள் காரணம் என எழுதி வைத்த கடிதமும் அவர் அருந்திய தூக்க மாத்திரை கவர்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்

இதற்கிடையில் பாலசுப்பிரமணியன் மனைவி உமாமகேஷ்வரி சம்பவம் குறித்து அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு க்கு புகாரளித்துள்ளார். இதுகுறித்து குழித்துறை அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளார் சிவசக்தி ஐயப்பன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, பால சுப்ரமணியம் தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்து வந்ததாகவும், அவர் விடுப்பு சம்பந்தமாக மருத்துவ சான்றிதழ்களை தாமதமாக தாக்கல் செய்ததாகவும், தற்போது விடுப்பு வழங்கி விட்டதாகவும், அவருக்கு தங்கள் தரப்பில் எந்த டார்ச்சரும் அவருக்கு இல்லை என்று விளக்கமளித்தார்

சிறந்த நடத்துனர் என அரசு போக்குவரத்து கழகத்தால் மூன்று முறை விருது பெற்ற நடத்துனர் ஒருவர் உயரதிகாரிகள் டார்ச்சர் என கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KavinKumar

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.