குற்றாலம் மெயினருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு..!!

23 February 2021, 9:57 am
kutralam falls - updatenews360
Quick Share

தென்காசி: தென்காசி குற்றாலம் மெயின் அருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு தொடர்வதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 20ம் தேதி பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

பின்னர் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால், நேற்று காலை மெயின் அருவிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் பெண்கள் குளிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் உடைந்து சேதமடைந்தன.

kutralam-waterfalls-updatenews360

மதியத்திற்கு பிறகு நீர்வரத்து குறைந்தது. ஆனாலும் தடுப்பு கம்பிகள் உடைந்து பெண்கள் குளிக்க பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் யாரையும் போலீசார் குளிக்க அனுமதிக்கவில்லை. தடுப்பு கம்பிகள் சரிசெய்யப்பட்ட பிறகுதான் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயினருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Views: - 7

0

0