ஆக்கிரமிப்பால் அழியும் அபாயத்தில் பிரணவ மலையின் அடையாளங்கள்: தொல்லியல் துறைக்கு மாற்ற கோரிக்கை

Author: Aarthi
8 October 2020, 4:24 pm
pranava malai - updatenews360
Quick Share

திருப்போரூர்: வரலாற்றுச் சின்னங்கள் உள்ள பிரணவ மலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு வரும் குடியிருப்புகளால் பாரம்பரிய அடையாளங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள பிரணவ மலையில் பழங்கால கல்வெட்டுகள், மூதாதையர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் நிறைந்துள்ளதால், இம்மலையை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.

இந்நிலையில், மலையை ஆக்கிரமித்து கட்டப்படும் குடியிருப்புகளை அகற்றும்படி தொல்லியல் துறை சார்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு 85-க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதற்குமாறாக தற்போது, ஆக்கிரமிப்பாளர்கள் மலையின் மீது கான்கிரீட் தூண் அமைத்து குடியிருப்புகளை விரிவுபடுத்தி வருகின்றனர்.

இதனால், வரலாற்று ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கைவைத்துள்ளனர். இதுகுறித்து, வரலாற்று ஆர்வலர் சந்திரசேகரன் கூறுகையில், மலைப்பகுதி நிலங்களை ஆவணங்கள் ரீதியாக தொல்லியல் துறையின் முழு அதிகாரத்துக்கு மாற்றியமைத்தால் மட்டுமே, பட்டா வழங்குவதை தடுக்கமுடியும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Views: - 55

0

0