நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை : கோவையில் போக்குவரத்து மாற்றம்… எந்த ரூட் தெரியுமா..??

Author: kavin kumar
21 February 2022, 9:47 pm
Quick Share

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தடாகம் சாலையில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்ததந்தொடர்ந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் தடாகம் சாலையில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 497 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.இதனிடையே தடாகம் சாலையில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மா நகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கவுளி பிரொன் ரோடு, காந்திபார்கி ரோடு மற்றும் மருதமலை ரோடு வழியாக வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் லாலிரோடு ஜங்சனில் இருந்து தடாகம் ரோடு வழியாக தமிழ்நாடு வனக்கல்லூரி சென்று அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவேண்டும்.

ஆனைக்கட்டியில் இருந்து வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் அவர்களது வாகனங்களை மேட்டுப்பாளையம் ரோடு, லாலி ரோடு ஜன்சன் வழியாக தமிழ்நாடு வனக்கல்லூரி சென்று அங்கு தங்களது வாகளங்களை நிறுத்தி வைத்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு வரவேண்டும், அல்லது அழகேசன் ரோடு வழியாக தங்களது வாகனத்தை தமிழ்நாடு வனக்கல்லூரியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு அவர்கள் அழகேசன் ரோடு சந்திப்பில் இருந்து

அரசு பொறியியல் கல்லூரிக்கு நடந்து வந்து பிரதான நுழைவு வாயில் வழியாக உள்ளே வரலாம். காந்திபார்க் வழியாக வாகனத்தில் வரும் பொதுமக்கள் மேட்டுப்பாளையம் ரோடு வழியாக சென்று என்.எஸ்.ஆர் ரோட்டிற்கு செல்லலாம். அவினாசி லிங்கம் கல்லூரி வழியாக வாகனத்தில் வரும் பொதுமக்கள் பாரதி பார்க் 4 வழியாக திரும்பி என்.எஸ்.ஆர் ரோட்டிற்கோ அல்லது தடாகம் ரோட்டிற்கோ செல்லலாம்.இவ்வாறு போலீசார் அறிவித்துள்ளனர்.

Views: - 600

0

0