பள்ளியில் சுதந்திர தின விழாவை முடித்து சைக்கிளில் வீடு திரும்பிய +2 மாணவிக்கு நேர்ந்த சோகம் : அரசு பேருந்து ஓட்டுநர் தப்பியோட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2022, 2:19 pm
School Student Dead -Updatenews360
Quick Share

சென்னை அருகே தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழாவை கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழாவை கொண்டாடி விட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த மாணவி லட்சுமிஸ்ரீ, அரசு மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

குரோம்பேட்டை பள்ளியில் பயின்று வரும் மாணவி, இன்று சுதந்திர தினவிழாவை முடித்து, சைக்கிளில் வீடு திரும்பும் போது அஸ்தினாப்புரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மாணவியின் சைக்கிள் மீது பேருந்து மோதி அவர் பலியானார். பொழிச்சலூர் – அஸ்தினாபுரம் சென்ற 52H அரசு பேருந்து மோதியதில் பிளஸ் 2 மாணவி லட்சுமி ஸ்ரீ உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய அரசு பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 146

0

0