திருச்செந்தூர் கோவிலில் அவலம்… பாத யாத்திரையாக பால் குடம் எடுத்து வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு.. பாலை கீழே ஊற்றி சென்ற பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 May 2023, 9:48 pm
Paal Kudam - Updatenews360
Quick Share

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படக்கூடிய திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கோடை விடுமுறையின் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் நிர்வாகம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதன் காரணமாக இன்று
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 06-ந் தேதி காவடி சுமந்து பாதயாத்திரையாக வந்துள்ளனர்.


தொடர்ந்து இன்று திருச்செந்தூர் வந்த அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவற்காக 51 குடங்களில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வந்துள்ளனர்.

அப்போது கோவில் நிர்வாகத்தினர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காததால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் கிரி பிரகாரத்தில் சுமந்து வந்த 51 பால் குடத்தையும் கொட்டி சென்றுள்ளனர்.

இதனால் கிரி பிரகாரம் முழுவதும் வழிந்தோடிய அபிஷேக பாலை பக்தர்கள் மிதித்து நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. சுமார் 9- நாட்களாக 250- கிலோ மீட்டர்தூரம் பாதயாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாதயாத்திரை ஆக வரும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தனி வரிசை இருந்தபோதிலும் அதை கோவில் நிர்வாகம் முறையாக கடைப்பிடிக்காமல் பாதையாத்திராக வந்த பக்தர்களின் வேண்டுதல்களை அலட்சியப்படுத்தி உள்ளதாகவும் கோவில் நிர்வாகம் மீது அரசுரையும் தமிழக அரசின் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 441

0

0