திருப்பூர் காங்கேயம் சாலை நல்லூர் காவல் நிலையம் அருகே ஊர்க்காவல் படை காவலர் வீர சின்னன் காவல்துறை வாகனத்தை நோக்கி வந்துள்ளார். அவருக்கு முன்புறமாக ராஜேஸ்வரி என்பவர் தனது எட்டு வயது மகளை அரசு பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக காவல் வாகனம் மோதியதில் திவ்யதர்ஷினி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் திவ்ய தர்ஷினி மீது காவல்துறையினர் வாகனம் மோதியுள்ளது .
இதில் சம்பவ இடத்திலேயே திவ்யதர்ஷினி உயிரிழந்தார். உடன் வந்த தாயார் ராஜேஸ்வரி பலத்த காயங்களுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பொதுமக்கள் காவல்துறை வாகனம் மற்றும் வாகனத்தில் இருந்த காவலர் வீர சின்னன் ஆகியோரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துனை ஆணையர் வனிதா உள்ளிட்ட காவலர்கள் விபத்தை ஏற்படுத்திய காவலரை மீட்டு சாலை ஓரமாக அமர வைத்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் திருப்பூர் காங்கேயம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவலர் வாகனம் மோதியதில் எட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.