கோவை அருகே பன்றி வேட்டைக்கு சென்றபோது விபரீதம்..! நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி :

19 January 2021, 11:22 am
Pig Hunting - Updatenews360
Quick Share

கோவை : கோவை அருகே உள்ள கிராமப்புற மலைப்பகுதியில் பன்றி வேட்டைக்கு சென்றபோது சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை அருகே உள்ள தீத்திபாளையம், மாதேஷ் கவுண்டர் வீதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 40), இவர் வனப்பகுதி கிராம பகுதியில் வசித்து வருகிறார். நேற்று இரவு நண்பர்கள் பாபு, ஆனந்த், ரங்கநாதன், ராமசாமி ஆகியோருடன் அரசுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக லைசென்ஸ் இல்லாமல் வேட்டைக்காக வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஐயா சாமி மலை வனப்பகுதிக்குள் சென்றனர்.

அந்த பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாட சென்றதாக தெரிகிறது. அப்பொழுது நண்பர்களில் ஒருவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி திடீரென காட்டுப் பகுதியில் உள்ள மரக்கிளையில் உராய்ந்து வெடித்தது.

அதில் அய்யாசாமி மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த மலை கிராம மக்கள் வனத்துறையினரும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி நண்பர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு துப்பாக்கி லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்தது குறித்தும் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவு நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 6

0

0