குட்டையில் குளித்த போது சோகம் : அக்கா, தம்பி உட்பட மூன்று பேர் நீரில் மூழ்கி பலி!!

17 April 2021, 10:11 am
3 Dead -Updatenews360
Quick Share

விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே மீன் குட்டையில் குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தம்பி உள்பட மூன்று குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் (வயது 30) கூலி தொழிலாளி. இவரது மகள் கனிஷ்கா (வயது 8), மகன் லத்தீஷ் (வயது 5). அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி (வயது 31). இவரது மகள் ரஷ்யா (வயது 7), மகன் தர்ஷன் (வயது 5).

இவர்கள் நான்கு பேரும் நேற்று பகுதியிலுள்ள புளியங்குட்டை என்கிற மீன் குட்டையில் குளிக்க சென்றுள்ளனர்.இதில் நான்கு பேரும் தண்ணீர் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததால் சேற்றில் சிக்கி அனைவரும் அலறியபடியே தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் உடனடியாக குட்டையில் மூழ்கி குழந்தைகளை மீட்டனர். இதில் தர்ஷன் உயிருடன் மீட்கப்பட்டும், மற்ற குழந்தைகளான கனிஷ்கா, இவரது தம்பி லத்தீஷ் அதே ஊரைச் சேர்ந்த ரக்ஷயா ஆகிய மூன்று குழந்தைகள் இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டனர்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பரணி நாதன் வி.ஏ.ஓ., சரத் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து குழந்தைகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 67

0

0