‘அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது’: ஜெய்பீம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!!
Author: Aarthi Sivakumar22 October 2021, 6:15 pm
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய்பீம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வெளியாக உள்ளது.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் அடுத்த மாதம் 2 ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் கடந்த 15ம் தேதி வெளியானது. இதனையடுத்த, ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அனல்பறக்கும் வசனங்களோடு, ஜெய்பீம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
1
0