நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் ‘விறுவிறு’: கோவையில் 10 ஆயிரம் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி..!!

கோவை: கோவையில் 19 இடங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.,19ல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 26ம் தேதி முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனிடையே தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோவையில் இன்று பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக மாநகர பகுதிகளில் உள்ள 5 மண்டலங்களுக்கும் தனித்தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வடக்கு மண்டலத்திற்கு பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரி, மத்திய மண்டலத்திற்கு நிர்மலா மகளிர் கல்லூரியிலும், கிழக்கு மண்டலத்திற்கு ரமநாதபுரம் மகளிர் பள்ளியிலும், மேற்கு மண்டலத்திற்கு அம்மணியம்மாள் பள்ளியிலும், தெற்கு மண்டலத்திற்கு ஆர்.கே.வி பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர புறநகர பகுதிகளில் 14 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர பகுதியில் மட்டும் 6 ஆயிரம் பேருக்கும், புற நகர பகுதியில் 4 ஆயிரத்து 172 பேருக்கும் என மொத்தமாக 10 ஆயிரத்து 172 அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு பேலட் இயந்திரங்கள் மற்றும் கண்ட்ரோல் இயந்திரங்களை எப்படி கையாள்வது, இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் எப்படி சரி செய்வது, வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் தேர்தல் நடைபெறும் இடங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் முன்பும் இதே போல் பயிற்சி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

13 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

14 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

15 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

15 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

16 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

16 hours ago

This website uses cookies.