சென்னையில் கம்பத்தில் கட்டி வைத்து திருநங்கையை அரை நிர்வாணப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் அருகே இருக்கும் பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை தனா. 25 வயதான இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம் போல, இரவு பணி முடிந்து திரும்பிய திருநங்கை தனா, உணவகத்தில் இரவு உணவை அருந்திவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சில மர்ம நபர்கள், தனாவை வழிமறித்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இருந்த மின்கம்பத்தில் தனாவை கட்டி வைத்து அவரது ஆடைகளை களைந்து அரைநிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவருக்கு பாலியல் தொந்தரவையும் கொடுத்து துன்புறுத்தியுள்ளனர். இதனை தாங்கிக் கொள்ள முடியாத தனா, விட்டுவிடும்படி கண்ணீர் மல்க கெஞ்சியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தனாவை மீட்டனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட நந்தகுமார் மற்றும் முருகன் என்பவர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
https://x.com/nabilajamal_/status/1760160977939812861?s=20
பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த திருநங்கையை கம்பத்தில் கட்டி வைத்து அரை நிர்வாணப்படுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.