ஆட்டோ ஓட்டி மக்களை கவர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் : அமைச்சரின் செயலால் ஆட்டோ ஓட்டுநர்கள் நெகிழ்ச்சி..!!(வீடியோ)

26 January 2021, 1:06 pm
Minister auto - updatenews360
Quick Share

ஆட்டோ ஸ்டாண்ட் துவக்க விழாவிற்கு சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்டோ ஓட்டிய காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களுடைய தீவிர முயற்சியால் காந்திகிராமம் பகுதியில் மருத்துவக் கல்லூரி உதயமானது. இந்நிலையில் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு செல்ல மினி பேருந்துகளும் இரண்டு இயக்கப்பட்ட நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஒட்டி பொதுமக்கள், பயணிகள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளை காண வருபவர்களுக்கு வசதியாக அதிமுக கட்சியின் அங்கம் வகிக்கும் கரூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் ஆட்டோ ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. இந்த ஆட்டோ ஸ்டேண்ட் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் அதிமுக கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழக போக்குவரத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் – திருச்சி சாலையில் உள்ள தெரசா கார்னர் பகுதிகளிலிருந்து அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகம் வரை ஆட்டோ ஓட்டி சென்று அசத்தினார். கரூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சங்கப் பெயர் பலகையும் , அதிமுக கழகக் கொடிகள் என்னும் வெற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே பொங்கல் அன்று ஆட்டோ ஓட்டிய நிலையில், தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆட்டோ ஓட்டியது பெரும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ரெங்கராஜ், மற்றும் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தானேஷ், தெற்கு நகரக் கழகச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.