11 மாவட்டங்களில் மீண்டும் போக்குவரத்து சேவை? முதலமைச்சர் ஸ்டாலின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை!!

2 July 2021, 1:07 pm
CM Stalin - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ஏற்கனவே 27 மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாமா, கடைகள் திறப்பு நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்திருப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Views: - 130

0

0