பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை முதல் வேட்பு மனு : திமுக அறிவிப்பு!!

2 September 2020, 8:46 am
DMK - Updatenews360
Quick Share

சென்னை : திமுகவில் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் வரும் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் கூட உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த கூட்டத்தில் யார் திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் என்பது தெரிந்து விடும்.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானதால் அந்த பதவி காலியாக உள்ளது, மேலும் திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

எற்கனவே பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா காரணமாக தடைப்பட்டது. இதனால் வரும் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் கூட உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை திமுக பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 4ஆம் தேதி நடைபெறும் எனவும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் 5ஆம் தேதி மாலை வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0