கர்ப்பிணிப் பெண்களை தரையில் அமர வைத்து சிகிச்சை: மதுரை ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவலம்

21 June 2021, 8:58 pm
Quick Share

மதுரை: மதுரையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிப் பெண்களை தரையில் அமர வைத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஆரம்ப சுகாதார நிலையம் பைகாரா முத்துராமலிங்கபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களை தரையில் அமர வைத்து இன்னலுக்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்து உள்ளது. மேலும் தரையில் உட்கார்ந்து இருக்கும்பொழுது மிகவும் சிரமமாக உள்ளது எனவும், ஒரு இருக்கை கூட அங்கு இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாயமாக இருக்கையில் அமர வைக்காமல் தரையில் அமர வைப்பதால் பலர் தரையில் நடந்து செல்லும்பொழுது கர்ப்பிணி பெண்கள் கையை ஊண்டி எந்திரிக்கும் பொழுது அவர்களை கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களை தரையில் அமர வைத்தார் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதார அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து அங்கு வந்து இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கூறுகையில்,” 70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியமர்த்தினால் பழங்காநத்தம் பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

மாதம் ஒருமுறை மருத்துவ செக்கப் மற்றும் இரத்த பரிசோதனைகள் தடுப்பூசி இவை அனைத்திற்கும் பழங்காநத்தம் பகுதி கர்ப்பிணி பெண்கள் பைக்கரா மகப்பேறு மருத்துவமனை செல்ல வேண்டும். ஒரு கிலோமீட்டர் தொலைவில் கர்ப்பிணி பெண்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை மிகவும் வருத்தமாக உள்ளது. மூடப்பட்டுள்ள பழங்காநத்தம் மகப்பேறு மருத்துவமனை நிரந்தரமாக செயல்படுத்தினால் இப்பகுதி மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தெரிவித்தார்.

Views: - 144

0

0