இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு அவர்கள் “காவேரி தாய்க்கு நாம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாது, ஆனால் கோடைக்காலத்தில் குறைந்து போதல் மற்றும் வறண்டு போவதால் அவதியுறுகிறாள். 83000 சதுர கிமீ பரப்பு கொண்ட காவேரி வடிநிலப் பகுதியில் பெரிய அளவில் மரம் சார்ந்த விவசாயம் மற்றும் தாவரங்களை வளர்ப்பது மட்டுமே காவேரி வருடத்தில் 12 மாதங்களும் மிகுதியாக பாய ஒரே வழி. வறண்டு கிடக்கும் தண்ணீருக்காக போராடுவதை விட காவேரி தாயை வலுப்படுத்தி மேம்படுத்துவோம். ஞானம் மேம்படட்டும்.” என்று கூறியுள்ளார்.
மரம் சார்ந்த விவசாயம் என்பது, மரங்களுக்கு இடையே பயிர் செய்வதும், வரப்பு ஓரங்களில் மரங்களை பயிரிடும் முறை ஆகும். குறிப்பாக டிம்பர் மரங்களை அதிக அளவில் நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் பலன்களோடு, விவசாயிகளுக்கு பொருளாதார பலன்களையும் இம்முறை அள்ளித் தரும்.
விவசாய நிலங்களில் அதிக அளவில் மரங்களை நடுவதன் மூலம் மண்ணின் தரமும், மண்ணின் நீர்பிடிக்கும் திறனும் மேம்படுகிறது. இதன் மூலம் மழைப் பொழிவு காலங்களில் அதிக படியான நீரினை பூமிக்குள் சேமிக்க முடியும். இதனை காவேரி வடிநிலப் பகுதியாக சொல்லப்படும் 83000 சதுர கிமீ பரப்பளவில் முறையாக செயல்படுத்தப்படும் போது, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, சிற்றோடைகளும், கிளை நதிகளும் புத்துயிர் பெற்று காவேரி ஆறு வற்றாமல் ஜீவ நதியாக ஆண்டு முழுவதும் பாயும்.
இதனை வலியுறுத்தியே காவேரி கூக்குரல் இயக்கத்தை சத்குரு அவர்கள் துவங்கினார். இவ்வியக்கம் தமிழக – கர்நாடக மாநிலங்களில் இருக்கும் காவேரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் பரவலாக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பயிற்சி வகுப்புகள், மானிய விலையில் மரக்கன்றுகள் வினியோகம் என பல்வேறு செயல்களை செய்து வருகிறது.
மேலும் இவ்வியக்கத்தின் மூலம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தோராயமாக 4.85 கோடி மரக் கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.