மெழுகுவர்த்தியில் எஸ்.பி.பி.,யின் உருவத்தை வரைந்து அஞ்சலி!!

26 September 2020, 6:11 pm
SPB Candle- updatenews360
Quick Share

கோவை : பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உருவத்தை மெழுகுவர்த்தியில் வரைந்து கோவையைச் சேர்ந்த நகைப் பட்டறைத் தொழிலாளி அஞ்சலி செலுத்தியுள்ளார் .

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா. இவர் அவ்வப்போது பல்வேறு வகையான சிற்பங்களை செய்து வருகிறார். சமீபத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர்-ன் உருவம், கருணாநிதி உருவம் உள்ளிட்ட சிற்பங்களை வடிவமைத்தார்.

மேலும், கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் தனது படைப்புகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி மூலம் அவரது உருவப் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தி உள்ளார் யு.எம்.டி.ராஜா. இவரது படைப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 5

0

0