“கொள்ளிடத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!”-கதறித் துடித்த உறவினர்கள்!

Author:
23 June 2024, 6:54 pm
Quick Share

திருச்சி மாவட்டம்
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினரர் சடலமாக மீட்டனர்!

திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் லூடஸ் என்பவரது மகன் சாம் ரோஷன் இவருக்கு வயது 15 அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று மதியம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் தடுப்பணை பகுதியில் குளிக்க தனது சக நண்பர்களுடன் வந்தபோது நீரில் மூழ்கி மாயமானார்.
நேற்று மதியம் 2.00 மணியிலிருந்து மாலை 6:30 மணி வரை சிறுவனை தேடும் பணியில் 20க்கும் மேற்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். பிறகு இரவு நேரம் சூழ ஆரம்பித்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் காலை முதல் ட்ரோன் கேமரா மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனை தேடி வந்தனர்.திருச்சி கன்டோன்மென்ட் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினர்,பெரம்பலூரிலிருந்து ஸ்கூபா டைவிங் தெரிந்த தீயணைப்புத் துறையினர் என 30 பேர் சிறுவனை தேடும் பணியின் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தைக் கண்ட சிறுவனின் பெற்றோர்கள் கதறித் துடித்தனர். மேலும் அங்கிருந்த உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது இதுபோல சிறுவர்கள் யாரும் பெரியவர்களின் துணை இல்லாமல் எங்கும் குளிக்க செல்லாதீர்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Views: - 168

0

0