நேற்று கணவர்.. இன்று மனைவி : திமுகவில் அடுத்தடுத்து இணைந்த திருச்சி அதிமுக தம்பதி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2021, 5:44 pm
Trichy Admk Join Dmk-Updatenews360
Quick Share

திருச்சி : கடந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியடைந்த அதிமுக பிரமுகர் நேற்று திமுகவில் இணைந்த நிலையில் இன்று அவரமு மனைவியும் இணைந்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட மருத்துவ அணி செயலாளராக பதவி வகித்து வந்த சித்தமருத்துவர் சுப்பையா பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எம்எல்ஏவாக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எண்ணியிருந்த நிலையில திருச்சி மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தி அடைந்த சுப்பையா பாண்டியன் தலைமைக்கு தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதன் காரணமாக கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை கட்சியில் இருந்து நீக்கினர்.

இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் மனோகரனுக்கு ஆதரவளித்து தேர்தலில் அவருக்கு ஆதரவாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும் திருச்சி மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் இன்று காலை திருச்சி தில்லைநகரில் உள்ள கே.என்.நேரு அலுவலகத்தில் அவரது முன்னிலையில் மருத்துவர் சுப்பையா பாண்டியனின் மனைவியும் அதிமுகவின் மகளிரணி செயலாளராக பதவி வகித்து வந்த தமிழரசியும் திமுகவில் இணைந்தார்.

முதல்நாள் கணவரும் அடுத்த நாள் மனைவியும் இணைந்தது திருச்சி அதிமுகவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சித்த மருத்துவர் சுப்பையா பாண்டியன் மற்றும் தமிழரசி ஆகியோரின் ஆதரவாளர்களும் அடுத்தடுத்து திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9சட்டமன்ற தொகுதிகளிலும், 14 ஊராட்சி ஒன்றிய ஒன்றியங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிருப்தியில் உள்ள அதிமுகவினர் விரைவில் திமுகவில் இணைவார்கள் என கூறப்படுகிறது.

Views: - 318

0

0