திருச்சி விமான நிலையம் வந்த 2 பேருக்கு கொரோனா : ஒமிக்ரான் பாதிப்பா…? எனக் கண்டறிய மரபணு சோதனை..!!

Author: Babu Lakshmanan
6 January 2022, 9:10 pm
Quick Share

திருச்சி : திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு விமானத்தின் மூலம் செல்ல இருந்த இரண்டு பயணிக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளையும், இங்கிருந்து வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகளையும் சுகாதாரதுறை அதிகாரிகள் உரிய கோரோனோ பரிசோதனை செய்யப்பட்டு அனுமதித்து வருகின்றது.

அதன்படி, இன்று காலை திருச்சியிலிருந்து சார்ஜாவிற்கு புறப்படவிருந்த விமானத்தில் பயணம் செய்ய நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது
கோவில்பட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒரு பயணி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பயணி ஆகிய இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரிகள், அவர்கள் இருவருக்கும்
கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் இருவரது மரபணுவை ஒமிக்ரான் சோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 374

0

0