திருச்சி விமான நிலையத்தில் 55 பயணிகளிடம் இருந்து 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய்,அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானங்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சிறப்பு மீட்பு விமானங்களாக இயக்கப்பட்டு வந்த விமானங்கள் தற்போது தினசரி விமான சேவைகளாக இயக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று நோய்க்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு தற்போது சாதாரண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் இருந்து குருவிகளாக அதிக அளவில் வியாபாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காலங்களில் அவர்களால் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் போது அவர்களுக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தளர்வுகள் அனைத்தும் அளிக்கப்பட்டு தற்போது விமான சேவைகள் அனைத்தும் மீண்டும் சாதாரண நிலை எட்டிய பின்பு மீண்டும் வியாபாரிகள் குருவிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு குருவிகளாக செயல்படுபவர்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதில் குறிப்பாக மலேசியா சிங்கப்பூர் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு குருவிகளாக சென்று வரும் பயணிகள் அதிக அளவில் திருச்சியில் இருந்து சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நேற்று முன்தினம் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு வந்தது.
இதனை கருத்தில் கொண்டு திடீரென நேற்று முன்தினம் இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த மலிண்டோ ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்கூட் ஏர்வேஸ் உள்ளிட்ட விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விமானங்களில் பயணம் செய்த சுமார் 60 பேர் மீது சந்தேகம் ஏற்படும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதால் அவர்களை தனியே அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒவ்வொருவரிடமிருந்தும் சுமார் 200 முதல் 500 கிராம் வரை கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. அந்த வகையில் சுமார் 55 பயணிகளிடம் இருந்து 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து, மேலும் இரண்டு நபர்கள் தங்கத்தை வயிற்றில் மறைத்து எடுத்து வந்ததாக தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர்களிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சோதனை மேற்கொண்ட மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீரென விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்வது வாடிக்கை. இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் குறித்து அதிகாரிகள் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், திருச்சி விமான நிலையம் பகுதியில் நேற்று காலை முதல் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.