திருச்சியை உலுக்கிய ஆடியோ : என்கவுண்டர் லிஸ்டில் இருந்ததாக கூறப்படும் ரவுடி, வழக்கறிஞர் உள்பட 3 பேர் கைது

21 July 2021, 8:10 pm
Trichy - updatenews360
Quick Share

திருச்சியில் செல்போன் ஆடியோ டிரெண்டான நிலையில், என்கவுண்டர் பட்டியலில் இருந்ததாக கூறப்பட்ட ரவடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், அல்லித்துறை வன்னியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள் (31). கடந்த 4 வருடகாலமாக அதே பகுதியில் வசிக்கும் பாலசுப்பிரமணியன், வக்கீல் ஒருவருடன் பேசும் ஆடியோ வைரலானது. அதில் தனக்கு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும், தமிழகத்தில் 42 ரவுடிகள் அதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 ரவுடிகள் என்கவுண்டர் லிஸ்ட்டில் இருப்பதாக கூறுகிறார். திருச்சியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் தன்னை வந்து பார்த்ததாகவும் கூறும் பாலசுப்பிரமணியன், உங்களுக்கு வேண்டிய ரவுடியை பார்த்து இருக்க சொல்லுமாறும் அட்வைஸ் கூறுகிறார்.

மற்றொரு ஆடியோவில் சைரன் வைத்த காரில் அமைச்சர் சேகர்பாபுவை போய் சந்தித்தாகவும் கூறுகிறார். இந்த ஆடியோ வைரலாகி திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தற்போது போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மேலும் ஆடியோவில் அவருடன் பேசிய கார்த்திக் என்ற வக்கீலையும், போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். இருவரையும் பொன்மலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து என்கவுண்டர் பட்டியலில் இருப்பதாக சாமியாரால் கூறப்பட்டு தேடப்பட்டு வந்த கொட்டப்பட்டு சேர்ந்த ரவுடி ஜெய்யையும் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட ரவுடி ஜெய்குமாரின் மனைவி கல்பனா திருச்சி மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில், தனது கணவர் திருந்தி வாழ்வதாகவும், தற்போது டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில் கொடைக்கானல் சென்ற அவரை திருச்சி போலீசார் சென்று கைது செய்து திருச்சி அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும், உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 180

0

0

Leave a Reply