15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மண்ணச்சல்லூர் பெரிய ஏரி : குளித்து குதூகலப்படும் மக்கள்… மகிழ்ச்சியில் விவசாயிகள்!!!

Author: Babu Lakshmanan
18 November 2021, 8:31 pm
trichy lake - updatenews360
Quick Share

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி ஊராட்சியில் உள்ள பெரிய ஏரி முழுவதும் 15 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிரம்பியது. உபரி நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பெரகம்பி ஊராட்சியில் சுமார் 113 ஏக்கர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெய்து வரும் தொடர் மழையால் ஏரி முழுவதும் தண்ணீர் நிரம்பி, உபரி நீர் காட்டாறு வழியாக வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அப்பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியோர் வரை தண்ணீரை கண்டுகளித்து குளித்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும், ஏரியின் கரையில் ஒரிடத்தில் நீர் கசிவால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை ஆய்வு செய்த பொதுப்பணி துறை அதிகாரி ஆய்வு செய்தார். தற்போது தண்ணீர் இருப்பதால் சீரமைப்பு பணிகள் செய்ய முடியாது. மண்அரிப்பு ஏற்ப்பட்ட இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க உள்ளோம் என கூறினார்.

இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தண்ணீரை வைத்து மூன்று மாதங்களுக்கு எங்களால் விவசாயம் செய்ய முடியும். மேலும், இந்த ஏரியில் உள்ள முட்களை சுத்தம் செய்து ஏரியை தூர்வாரியிருந்தால் இந்த உபரி நீர் வெளியேறாமல் ஏரியிலே தேங்கியிருக்கும். மேலும் மூன்று மாத விவசாயம் 6 மாதமாக எங்களுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும். எனவே, அரசு அதிகாரிகள் வரும் காலத்திலாவது இந்த ஏரியை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Views: - 285

0

0