திருச்சி பிஷப் கல்லூரி பாலியல் தொல்லை விவகாரம் : புகாரளித்த மாணவிகளிடம் சமூக நல அலுவலர் விசாரணை!!

3 July 2021, 3:12 pm
Bishop College - Updatenews360
Quick Share

திருச்சி : பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்த பிஷப் கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட சமூக நல அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகள் சிலர், கல்லுாரி முதல்வரிடம் பாடம் நடத்தும்போது நெருக்கமாக அமர்ந்து கொள்வது, பாலியல் சீண்டல்கள், ஆபாசமாக இரட்டை அர்த்தத்துடன் பேசுவது, சில்மிஷம் செய்வது, அவரது அறைக்கு தனியாக வரச்சொல்லி வற்புறுத்துவது என்று தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளை துறை தலைவர் தந்து வருவதாகவும், அதற்கு பேராசிரியர் நளினி என்பவர் துணை போவதாகவும், இதன் காரணமாக தாங்கள் கல்லுாரிக்கு வருவதற்கு பெற்றோர்கள் அச்சம் தொிவிப்பதாகவும் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கல்லுாரி நிர்வாகம் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தலைமையில், துணை முதல்வர் உள்ளிட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணை குழுவானது மாணவிகளிடமும், கல்லுாரி பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தியதின் அடிப்படையில் தமிழ்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் பேராசியர் நளினி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மாவட்ட சமூகநல அலுவலர் உஷா பாதிக்கப்பட்ட பெண்களிடம் தொலைபேசி மூலமாக முதல் கட்ட விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இன்று மாணவிகள் நேரில் அழைத்து விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை காவல்துறைக்கு எந்தவிதமான புகார்கள் மாணவிகள் அல்லது கல்லூரி நிர்வாகமும் தெரிவிக்காததால் காவல்துறை ரீதியாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 156

0

0