பட்டாகத்தியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம் : இளைஞர்கள் அட்டகாசம்!!

5 September 2020, 10:02 am
Cake Bday - Updatenews360
Quick Share

திருச்சி : பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ரெளடிகள் பட்டாகத்தியில் கேக் வெட்டி கொண்டாடி வந்தனர். இதனை தொடர்ந்து இச்செயலை பலரும் கடைபிடித்து வந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், முசிறியில் இளைஞர்கள் சிலர் முசிறி நகர பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர் .இதனை அங்கிருந்த நண்பர்கள் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வாட்ஸ்அப் வீடியோ காட்சி பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாக முசிறியில் பரவி வருகிறது. இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் ரெளடி செயல்பாடுகள் போல தற்போது வாலிபர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவது கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது எனவும், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 6

0

0