மணப்பாறை மில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை : குடும்பப் பிரச்சனையா..? என போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
27 August 2021, 10:16 am
Quick Share

மணப்பாறை : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மணப்பாறை அண்ணாவி நகரை சேர்ந்த டீ மாஸ்டர் பொன்முருகன் (45). இவரது மகன் விஜய் (24). கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் பஞ்சாலையில் விஜய் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் பூசாரிப்பட்டியை சேர்ந்த ஹேமா என்பருக்கு திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகிய நிலையில், குடும்பத்தினர் அனைவரும் புதன்கிழமை மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். விஜய் பிற்பகலில் பணிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த விஜய் பணிக்கு செல்லவில்லை.

மேலும், பிற்பகலில் அவரது தாய் விஜயலெட்சுமி செல்லிடைப்பேசியில் தொடர்புக்கொண்டபோது அழைப்பையும் ஏற்கவில்லையாம். பின் வீட்டின் அருகில் இருந்த உறவினர்களுக்கு தகவல் அளித்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது விஜய் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளர் சு.கருணாகரன் தலைமையிலான போலீஸார் வாலிபரை உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தனியாக இருந்த வாலிபர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 207

0

0