டெமோ பார்த்துவிட்டு சென்று புறாக்கூண்டை திருடிச் செல்லும் குடிகாரர்கள் : சிசிடிவியில் பதிவான காமெடி கலந்த திருட்டு …!

Author: Babu Lakshmanan
28 September 2021, 10:26 am
theft - updatenews360
Quick Share

திருச்சி : திருச்சி அருகே குடிபோதையில் இருந்த நபர்கள், நைஸாக புறாக்கூண்டை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பாலக்கரை அடுத்துள்ள துரைசாமிபுரம் பகுதியில் இருசக்கர சைக்கிள்கள், திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு குடிபோதையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் புறாகூண்டுகள், முயல், நாய்க்குட்டி ஆகிய வளர்ப்பு பிராணிகளின் கூண்டுகளை திருடி செல்கின்றனர்.

இது தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பபட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான சில காட்சிகள் தான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருடுவதற்கு முன்னதாக பைக்கில் புறா கூண்டை வைத்து விட்டு, இருவரும் அமர்ந்து செல்ல முடியுமா..? என்பது போன்ற ஒத்திகையையும் நடத்தியுள்ளனர். பின்னர், மக்கள் நடமாட்டம் காணப்பட்டதால், தான் கட்டியிருந்த லுங்கியை கட்டுவது போல் நடித்து இந்த திருட்டிடை அரங்கேற்றியுள்ளனர்.

ஆனால், புறாக் கூண்டு பெரிதாக இருப்பதால், வாகனத்தை ஒருவர் ஓட்டுவதும், பின்புறம் புறாக் கூண்டை வைத்துக் கொண்டே, பின்னால் மற்றொருவர் பிடித்துக் கொண்டே ஓடி எஸ்கேப் ஆகியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கையில், “டாஸ்மாக்கிற்கு வரும் நபர்கள் பூச்செடிகள், புறா கூண்டு மட்டுமல்லாமல், செருப்பை கூட சில சமயங்களில் திருடி செல்கின்றனர்,” என வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக அப்பகுதி மக்கள் இதுவரை காவல் துறையினருக்கு எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை.

Views: - 164

0

0