“வாழ வழியே இல்ல“ ! எலி பேஸ்ட்டை சாப்பிட்ட பொறியியல் பட்டதாரி குடும்பம்!!

11 September 2020, 1:50 pm
Family Suicide Attempt - updatenews360
Quick Share

திருச்சி : வருவாய் இல்லாமல் வறுமையின் பிடியில் உள்ள பட்டதாரி படித்த இளைஞரின் குடும்பம் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 56) டீ மாஸ்ட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கிகிச்சை பெற்று வருகிறார். இவாது மகன் ராஜேஸ் பி.இ படித்துள்ளார். ஆனால் சரிவர வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞானசேகருக்கு உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லமுடியாத நிலையில் வருவாய் பற்றாக்குறை இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த குடும்பத்தினர் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மூவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0