திருச்சி: திருச்சி-கரூர் பைபாஸ் சாலை உள்ள தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில அலுவலகம் பகுதியில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திடீரென மண்டை ஓட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் அய்யாகண்ணு பேசியதவாது;- கடந்த 300 நாட்களுக்கு மேலாக மத்திய அரசு கொண்டுவந்த விவசாய விரோத 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என பஞ்சாப் ஹரியானா, சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநில சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தூண்டுதலில் பேரில் அவர் மகன் கூட்டத்தில் விவசாயிகளின் மீது காரை ஏற்றியதில் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதற்காக அவரையும் அவரது மகனையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புறத்தில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
0