மனைவி மற்றும் மகனை கொலை செய்த தந்தை!!

22 August 2020, 3:37 pm
Husband Kills Wife And Son- Updatenews360
Quick Share

திருச்சி : மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் மனைவி மற்றும் மகனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லித்துறையில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 52). இவருக்கு ராதிகா (வயது 36) என்ற மனைவியும் ரோகித் (வயது 14) கீர்த்திவாசன் (வயது 8 ) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

கூலித் தொழிலாளியான மாரியப்பன் கடந்த சில தினங்களாக சரியான வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மாரியப்பன் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில் மாரியப்பன் இன்று அதிகாலை 3 மணியளவில் உறங்கிகொண்டிருந்த மனைவி, மகன் கீர்த்திவாசன் இருவர் தலையிலும் கல்லை போட்டு நசுக்கி கொலை செய்துவிட்டு மகன் ரோகித்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீசார் இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாரியப்பன் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்பியோடிய மாரியப்பன் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 10 வருடம் தண்டனை பெற்று தண்டனை காலம் முடிந்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 42

0

0