‘கன்னித்தீவ தேடி அலயற சிந்துபாத் எங்க… கன்னிகள வச்சு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தி எங்க’..! பரபரப்பை கிளப்பிய திருமண கட்அவுட்…!

29 August 2020, 5:19 pm
nithi banner 1- updatenews360
Quick Share

திருச்சி அருகே திருமண வைபவத்தில் நித்யானந்தாவுக்கு ஆதரவாக நண்பர்கள் வைத்த பேனர் பெரும் வைரலாகி வருகிறது.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்ற தற்போது  வரை தெரியவில்லை. இந்த நிலையில், கைலாசா என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக அதிரடியாக வலைதளம் மூலம் தெரிவித்தார் நித்யானந்தா. மேலும், கைலாசா நாட்டின் கரன்சியையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்படியிருக்க, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் நண்பர்கள் பலர், விநோதமாக ஒரு விளம்பர கட் அவுட்டை வைத்துள்ளனர். அதில் இப்படியான வாசகம் இடம் பெற்றுள்ளது,

“பல வருசமா கன்னித்தீவ தேடி நாயா அலையிறசிந்துபாத் எங்க…”
“கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்யானந்தா எங்க…” என்ற வரிகள்

அதுமட்டுமல்லாமல், “நோ சூடு” நோ சொரனை” என்ற நித்யானந்தாவின் தாரக மந்திரமும் அந்த கட் அவுட்டில்
இடம் பிடித்துள்ளது. மேலும், நித்யானந்தாவின் பெரிய புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர்கள் கடைசியாக “கைலாசா செல்ல இருக்கும் நண்பர்கள்” என்று குறிப்பிட்டு அனைவரின் போட்டாக்களையும் போட்டுள்ளனர்.

இந்த கட் அவுட்டை பார்த்த பொதுமக்கள் பலரும் “கைலாசா” நாடு தனித்துவம் பெறுகிறதோ இல்லையோ அதற்கான விளம்பரத்திற்க்கு பஞ்சமில்லை கூறி செல்கின்றனர்.

Views: - 49

0

0