அதிக பணிச்சுமை… இதுல காதல் தோல்வி வேற : விடுதியில் இளம் மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு..!!

Author: Babu Lakshmanan
17 September 2021, 1:58 pm
trichy suicide - updatenesws360
Quick Share

திருச்சி : அதிக பணிச்சுமை காரணமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்தது முதல் மருத்துவர்களின் பணி இரட்டிப்பாகி உள்ளது. ஓய்வெடுக்கக் கூட முடியாத நிலையில், மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இப்படியிருக்கையில், பணிச்சுமை காரணமாக இளம் மருத்துவ மாணவர் ஒருவர் திருச்சியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்‌ மாவட்டம்‌ ஒட்டன்சத்திரம்‌ அருகே உள்ள சின்ன மண்டவாடி பகுதியைச்‌ சேர்ந்த நாச்சிமுத்து மகன்‌ ரஞ்சித்‌ (26). இவர், திருச்சியில்‌ மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில்‌ உள்ள மாணவர்கள்‌ விடுதியில்‌ தங்கி ரஞ்சித்‌ மேற்படிப்பு படித்து வந்தார்‌. இந்த நிலையில், இன்று அதிகாலை விடுதியில் இருந்த நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பணிச்சுமை அதிகமாக இருந்ததோடு, காதல் தோல்வியினால் ஏற்பட்ட விரக்தியுமே, இந்த முடிவை ரஞ்சித் எடுக்கக் காரணமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து அரசு மருத்துவமனை போலீஸார்‌ வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

Views: - 279

0

0