திருவொற்றியூர், குடியாத்தம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கே வெற்றி : அமைச்சர்கள் கூட்டாக பேட்டி!!
6 September 2020, 5:26 pmதிருச்சி : திருவொற்றியூர், குடியாத்தம் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவின் கருமண்டபம் பகுதி சார்பில் 9 வது வட்டத்திற்க்கான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டு பயணிகள் வருகை, வெளிமாநில பயணிகள் வருகை மத்திய , மாநில அரசுகள் தளர்வுகளை அறிவிக்கிற அன்று முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்.
திருவெற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற போஸ்டர் யுத்தம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், போஸ்டரில் எந்த அச்சகத்தில் அச்சிட்பபட்டது அல்லது யார் அடித்தார்கள் என்ற எந்த விவரமும் கிடையாது, எனவே இது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. தலைமை எடுக்கும் முடிவுக்கு நாம் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும் என்றார்.
0
0