திருச்சி : திருச்சியில் வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்ட அந்த வாலிபர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும், திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் தொழிலாளி விக்ரம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் மூன்று நபர்கள் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது தெரியவந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து சிசிடிவி உதவியுடன் தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சந்தேகத்து இடமாக ஒரு பெண் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை பெண் சவகாசம் தொடர்பாக ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
This website uses cookies.