திருச்சியில் காவலர் திடீர் தற்கொலை : சிக்கிய கடிதத்தில் ‘ஷாக்‘ தகவல்!!

18 September 2020, 6:27 pm
Trichy Police Suicide - updatenews360
Quick Share

திருச்சி : காவல்துறை மோப்பநாய் பிரிவில் பணியாற்றி வந்த காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது 33). இவர் திருச்சி காவல்துறை மோப்பநாய் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் கே.கே நகரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர் இன்று தனது வீட்டில் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த
கே.கே நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தன் சாவுக்கு யாரும் காரணம் அல்ல, என்றும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலையில் ஈடுபட்டதாகவும் அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவருக்கு திருமணம் ஆகவில்லை. வேறு எதாவாது காதல் விவகாரமா? அல்லது பணி அழுத்தம் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் காவலர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 9

0

0