2 வயது குழந்தையுடன் கர்ப்பிணி பெண் தீக்குளிப்பு : திருச்சி அருகே சோகம்!!

6 September 2020, 6:46 pm
Trichy Mom Suicide With Son - Updatenews360
Quick Share

திருச்சி : துறையூர் அருகேகர்ப்பிணி  பெண் தனது 2 வயது குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கோட்டபாளையம் களர்மேடு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 30) லாரி ஓட்டுனராக  உள்ளார். இவரது மனைவி ரஞ்சனா(வயது 22) இவர்களுக்கு  கமலேஷ் என்ற இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

வேல்முருகன் ஊரில் இல்லாத நேரத்தில் ரஞ்சனா  வீட்டினருகே உள்ள குளியலறையில்  தனது மகனுடன் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார். தீயின் எரிச்சல் தாங்காமல் அலறியதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் குளியலறை தாழ்ப்பாளை உடைத்து எரிந்த நிலையிலிருந்த ரஞ்சனாவையும் இரண்டு வயது குழந்தையையும் மீட்டு ஆபத்தான நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை கைலாஷ் பரிதாபமாக இறந்தான்.

இதையடுத்து ரஞ்சனா மருத்துவ மனையில் தீவிர சிகிக்சையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தை குறித்து முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் பிரம்மானந்தம், மற்றும் துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும் தீக்குளித்ததற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  2 வயது குழந்தையுடன் தீக்குளித்ததும் ரஞ்சனா 2மாத கர்ப்பிணியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து முசிறி சப்-கலெக்டர் ஜோதிசர்மா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Views: - 10

0

0