பேஸ்புக் மூலம் முளைத்த காதல்… காவலரை திருமணம் செய்த ஆசிரியர் தற்கொலை : ஆர்டிஓ விசாரணை…!!!
Author: Babu Lakshmanan22 February 2024, 12:07 pm
திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்த 6 மாதத்தில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள எட்டரை கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கஜப்பிரியா (35). இவர், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் தொடர்பு கிடைத்தது. தொடர்ந்து அவருடன் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கார்த்திக் காவலராக பணியாற்றி வருகிறார். தன்னுடைய காதல் குடும்பத்திற்கு தெரிய வரவே, குடும்பத்தினருக்கு தெரியாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவலர் குடியிருப்பில் இருவரும் சந்தோஷமாக கடந்த ஆறு மாதமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கஜப்பிரியா கணவனை பிரிந்து திருச்சிலுள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் கஜப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர், கதவு உள்புறம் தாழிடப்பட்டிருந்ததை கண்டு மகளை பலமுறை அழைத்துள்ளனர்.
ஆனால், வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் பிணமாக தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்டம் சோபரசன் பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் காவல்துறையினர் விரைந்து சென்று கஜப்பிரியா உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். தற்கொலை செய்து கொண்ட கஜப்பிரியாவும், காவலர் கார்த்தியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.