16 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்: காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்

7 September 2020, 10:27 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் அருகே 16 வயது சிறுமியினை பாலியல் பலாத்காரம் செய்து 7 மாத கர்ப்பிணியாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, தலைமறைவாக உள்ள ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.

சமயபுரம் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். தினசரி கூலித் தொழிலாளியான இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அப்போது அவருக்கு கைக்குழந்தையில் பெண் குழந்தை இருந்தது. கோவிந்தராஜ் பெண் குழந்தையினை வளர்த்து வந்து, தனது வாழ்நாளை கழித்து வந்தார். அந்த பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொணலைப் பகுதியில் உள்ள மலைமாதா தனியார் கிருஸ்தவ பள்ளியில் படிக்க வைத்து, பள்ளிக்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி 10 ம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார்.

அப்போது அதே பள்ளியில் 12 ம் வகுப்பு படித்த சமயபுரம் மருதூர் கிராமத்தினைச் சேர்ந்த விஜய் என்ற மருதுபாண்டி காதலித்துள்ளார். தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், மருதுபாண்டி திருச்சி அல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பவுன்ராஜ் மகன் விமல்குமார் (21). சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் வாடகை கார் சம்பளத்திற்காக ஓட்டி வருகிறார். அதே போல லால்குடி பகுதியைச் சேர்ந்த தினேஸ் (20) என்ற இரு இளைஞர்களும் மருதுபாண்டிக்கு நண்பர்கள்.

காதலியினை தனது நண்பர்கள் இருவருடனும் உடல்ரீதியாக சந்தோஷப்படுத்தினால் தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என தொடர்ந்து மிரட்டியுள்ளார். தாய் இல்லாமல் தினக்கூலி வேலை செய்து வரும் தந்தையோடு அரவனைப்பில் வளர்ந்து வரும் சிறுமி காதலன் பேச்சினை மீறாமல் சம்மதித்துள்ளார். சமயபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக மூவருடம் தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால், வீட்டில் அருகில் இருந்த பெண்ணிடம் கூறியதால், அந்த பெண் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் காட்டிய போது, சிறுமியினை பரிசோதித்த அந்த மருத்துவர் சிறுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளதென கூறினார்.

இதனடிப்படையில் சிறுமியும் அவரது தந்தையும் லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், காவல்நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் விசாரணை செய்து, விஜய் என்ற மருதுபாண்டியினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தும், மேலும் தலைமறைவாக உள்ள அல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விமல்குமார், லால்குடி தினேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Views: - 6

0

0