நாளை மகாளய அமாவாசை முன்னிட்டு நீர் நிலைகளுக்கு வரத் தடை ! முன்கூட்டியே மக்கள் குவிந்ததால் பரபரப்பு!!

16 September 2020, 5:32 pm
Mahalaya Amavasai - updatenews360
Quick Share

திருச்சி : நாளை மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்க முகக் கவசம் சமூக இடைவெளியின்றி இன்றே மக்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்ததால் கூட்டத்தை சமாளிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாத திருச்சியில் நாளை மகாளய அம்மாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு), அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஒடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் யாரும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு மேற்படி நீர்நிலைகளுக்கு வர வேண்டாம் என திருச்சி மாநகர காவல்துறை, மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் தடை மீறி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் மஹாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஜதீதம். இதன் காரணமாக நாளை நீர் நிலைகளில் திதி கொடுக்க தடையால் நூற்றுக்கணக்கானபொதுமக்கள் இன்று காலை முதலே அம்மா மண்டபத்தில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து குவிந்தனர்.

திடீர் என மக்கள் கூடியதால் கூட்டத்தை சமாளிக்க கூடுதலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் முககவசம், சமுக இடைவெளி ஆகியவற்றை எதையும் கடைபிடிக்கவில்லை, என்பதை கண்டு காவல்துறை ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

Views: - 1

0

0