பாரம் தாங்காமல் கவிழ்ந்த லாரி : திம்பத்தில் திரும்ப முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2021, 2:57 pm
Lorry Upset - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 13 வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகம் கர்நாடகம் மாநிலங்களுக்கிடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இச்சாலை வழியாக 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று சாம்ராஜ்நகர் இருந்து கருங்கல் பாரம் ஏற்றி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதை 13 வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முடியாமல் பழுதடைந்து நின்றது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் கிரேன் வாகனம் மூலம் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது லாரி கருங்கல் பாரம் தாங்காமல் திடீரென கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் மீண்டும் கிரேன் வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகம் கர்நாடகம் மாநிலங்களுக்கிடையே சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 205

0

0