“கத்திப்பட்ட காயத்தோடு காவல்நிலையம் ஏறி பயனில்லை“ : விரக்தியில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயற்சி!!
23 November 2020, 6:15 pmமதுரை : நில அபகரிப்பது தொடர்பாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் கோபால்சாமி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் உள்ளது. அதனை அவரது உறவினர் மற்றும் அந்த ஊரை சேர்ந்த தலையாரி மதிவாணன் மற்றும் சிலர் அபகரித்து உள்ளனர்.
இதுபற்றி கோபால்சாமி கேட்டபோது அவரை கத்தியால் குத்த முயன்றுள்ளனர். கத்திக்குத்து காயத்துடன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இது சம்பந்தமாக கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி மதுரை கலெக்டர், மாவட்ட எஸ்பி, ஐஜி, டிஜிபி, சிஎம் செல் என அனைவரிடமும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அலுவலக நுழைவுவாயில் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்த போலீசார் அவரை மீட்டு தல்லாகுளம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
0
0