விளையாடிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி! தூத்துக்குடியில் சோகம்!!

3 September 2020, 1:21 pm
Kvp Shock Dead - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன், மின்சாரம் தாக்கிய உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் பாண்டி என்பவரது மகன் சந்தியாகு(வயது 12). கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வந்த இவர், அதே பகுதியில் 5ஆவது தெருவில் இடிந்த நிலையில் சேதமடைந்த வீட்டின் அருகே அப்பகுதி சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சேதமடைந்த வீட்டில் தொங்கிய மின்சார வயரை சந்தியாகு தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசி எறியப்பட்டார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது பெற்றோர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தும் கிழக்கு காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேதமடைந்து பயன்பாடு இல்லமால் இருக்கும் வீட்டில் மின் இணைப்பினை மின்சாரம் வாரியம் துண்டிக்கமால் விட்ட அலட்சியம் காரணமாக தான் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Views: - 6

0

0