வீட்டு உபயோக பொருள் என கூறி கடத்தல்! ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் !

15 August 2020, 1:44 pm
Kvp Gutka Seized - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் எனக்கூறி 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா கடத்தி வந்த இருவரை கைது செய்த போலீசார் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காசிராஜன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த சிறிய ரக கண்டனர் லாரியை மறித்து சோதனையிட்ட போது அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருப்பதாக கூறி உள்ளனர் .

இதனையடுத்து சீல் வைக்கப்பட்ட வாகனத்தை திறந்து பார்த்தபோது அதில் 62 மூட்டைகளில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து வாகன ஓட்டுனர் மோகன் மற்றும் மஞ்சுநாதன் இருவரையும் கைது செய்த விளாத்திகுளம் காவல்துறையினர் சிறியரக கண்டெய்னர் வாகனம் மற்றும் 5லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 26

0

0