அதிகாரிகளை மிரளச் செய்த கப்பல் : தூத்துக்குடியில் ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!!

21 April 2021, 6:28 pm
thoothukudi ship- updatenews360
Quick Share

பிரேசிலில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.1,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி வழியாக தமிழகத்திற்கான கடல்வழி வணிகம் நடந்து வருகிறது. அந்த வகையில், பிரேசிலில் இருந்து சரக்கு பெட்டகங்களை ஏற்றி வந்த பிரமாண்ட கப்பலில் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, ஒரு கண்டெய்னரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளுக்கு நடுவில் 300 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன் சந்தை மதிப்பு ரூ.1,500 கோடி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், போதைப் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 250

0

0