வீண் விளம்பரத்தால் வந்த சிக்கல்… சினிமா பாடலுக்கு அரிவாளுடன் ஆட்டம்… கிளைமேக்ஸில் நடந்த சம்பவம்..!!!

Author: Babu Lakshmanan
3 August 2021, 10:09 am
thoothukudi arrest - updatenews360
Quick Share

தூத்துக்குடி : சினிமா பாடலுக்கு அரிவாளுடன் ஆட்டம் போட்ட இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழ் சினிமா பாடல் ஒன்றுக்கு கையில் அரிவாளை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு, அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை தனது செல்போனில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியது.

பின்னர், இந்த வீடியோவானது மாவட்ட காவல் காணிப்பாளர் ஜெயக்குமாரின் பார்வைக்கு சென்றது. இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக அரிவாளுடன் வீடியோ எடுத்து, அதனை பரவச் செய்த நபர் குறித்து விசாரித்து, கைது செய்யுமாறு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அரிவாளுடன் ஆட்டம் போட்டது மணக்கரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பையா (30) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, முறப்பநாடு காவல் நிலைய காவலர்கள், வழக்குப்பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தனர். வீண் விளம்பரத்திற்காக வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பதிவிட்ட நபருக்கு நேர்ந்த கொடுமை அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்று காவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Views: - 311

0

0